ஆர்.கே.நகரில் ஜல்லிக்கட்டு காளையுடன் மதுசூதனன் பிரசாரம்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
சென்னை,
போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, அப்போது முதல்–அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்தார்.
இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் நேற்று ஜல்லிக்கட்டு காளையுடன் தொகுதிக்குட்பட்ட ஏ.இ.கோவில் தெரு, அம்மணி அம்மன் தோட்டம், வ.உ.சி.நகர், கார்ப்பரேஷன் காலனி, டி.எச். சாலை உள்பட பல இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் வாக்காளர்களிடம், ‘ஜல்லிக்கட்டுக்கு முயற்சி எடுத்து அனுமதி பெற்று தந்த ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளராகிய என்னை நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறி, ‘மின் கம்பம்’ சின்னத்துக்கு வாக்குகள் திரட்டினார்.
ஜல்லிக்கட்டு காளையுடன் மதுசூதனன் மேற்கொண்ட பிரசாரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மதுசூதனனுடன் வடசென்னை ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.