தமிழகம் முழுவதும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சுற்றுப்பயணம்

பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

Update: 2017-03-01 19:45 GMT

சென்னை,

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்குவதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகம் முழுவதும் 35 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவாரூர் பொதுக்கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பேசுகிறார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

பா.ஜ.க. தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காகவும், பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் விளக்குவதற்காகவும் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகம் முழுவதும் 35 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி, 2–ந் தேதி (இன்று) தஞ்சாவூர் மேற்கு, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், மாலை திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

3–ந் தேதி (நாளை) நாகை வடக்கு, நாகை தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். 4–ந் தேதி மதுரையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் அவர், மாலையில் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

கோவையில் தாமரை யாத்திரை

இதேபோல், 5–ந் தேதி திருச்சி, அரியலூர், 7–ந் தேதி வேலூர், 8–ந் தேதி திருநெல்வேலி, 9–ந் தேதி மதுரை, சிவகங்கை, 10–ந் தேதி கரூர், பெரம்பலூர், அரியலூர், 11–ந் தேதி கடலூர், விழுப்புரம், 12 மற்றும் 13–ந் தேதிகளில் சென்னை, 14–ந் தேதி கோவை ஆகிய இடங்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் செல்கிறார். அங்கு நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் அவர் பேசுகிறார். கோவையில் தாமரை யாத்திரையை அவர் தொடங்கிவைக்கிறார்.

மேலும், 15–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், 18–ந் தேதி கோவை, 19–ந் தேதி திருப்பூர், ஈரோடு, 21–ந் தேதி விழுப்புரம், 22–ந் தேதி திருவள்ளூர், காஞ்சீபுரம், 23–ந் தேதி வேலூர், திருவண்ணாமலை, 25–ந் தேதி சேலம், தர்மபுரி, 26–ந் தேதி நாமக்கல், 27–ந் தேதி தேனி, திருச்சி, 29–ந் தேதி கன்னியாகுமரி, 30–ந் தேதி விருதுநகர், நெல்லை, 31–ந் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்று பேசுகிறார்.

பொதுக்கூட்டம்

மேலும், ஏப்ரல் 2–ந் தேதி நீலகிரி, 4–ந் தேதி வேலூர், 5–ந் தேதி திருவாரூர், புதுக்கோட்டை, 6–ந் தேதி ராமநாதபுரம், 7–ந் தேதி திருவள்ளூர், 8–ந் தேதி தூத்துக்குடி, 9–ந் தேதி தஞ்சாவூர், 10–ந் தேதி திண்டுக்கல், தேனி, 11–ந் தேதி கரூர், 15–ந் தேதி திண்டுக்கல், 16–ந் தேதி நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடைபெறும் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்று தமிழிசை சவுந்தரராஜன் பேசுகிறார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்