ஜெயலலிதாவுக்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. டாக்டர்கள் விளக்கம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே விளக்கம் அளித்தார்.

Update: 2017-02-06 09:26 GMT
சென்னை

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே சென்னை ஓட்டலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு மருத்துவ முறைகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கபட்ட்டது. நோய் தொற்றால் ஜெயலலிதா கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு இருந்தார். மூச்சு விடுவதில் சிரப்பட்டு வந்தார்.நுரையீரல் தொற்று இருந்தது.நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம்.ரத்ததில் பாக்ட்ரீய கலந்து பாதிப்பு. ரத்ததில் இருந்த பாக்ட்ரீயா மற்ற உறுப்புகளுக்கு பரவியது. செப்சிஸ் உறுப்புகளை செயலிழக்க செய்தது.இதனால் பாதிப்பு அதிகமானது.சிகிச்சைக்கு கொண்டு வரும் போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தார்.

ரத்த அழுத்தம் சர்க்கரை பாதிப்பு அதிக அளவு இருந்தது. தேர்தலுக்காக கை ரேகை பதிவு செய்தோம்.அப்போது அவர் சுய நினைவுடன் இருந்தார். கையில் டிரிப் ஏறியதால் கைரேகை பதிவு எடுக்கபட்டது.ஜெயலலிதா எங்களிடம் சைகை செய்தார்.தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா அறிந்து இருந்தார். டிரிக்கியோஸ்டோமி  செய்தபின் அவருக்கு சுயநினைவு திரும்பியது.சுய நினைவு திரும்பியதால் தான் பிசியோ தெரபிக்கு பரிந்துரைக்கப்பட்டது.நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியை புகைப்படம் எடுப்பது வழக்கமில்லை.ஜெயலலிதாவுக்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை.ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்