உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்; ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

Update: 2017-01-01 20:45 GMT

சென்னை,

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பனிச்சரிவு

காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டம், கே.வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான கண்ணன் என்ற தாமோதரகண்ணன் என்பவர் கடந்த மாதம் ஜனவரி 28–ந் தேதியன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 30–ந் தேதியன்று உயிரிழந்தார்.

ரூ.20 லட்சம்

இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். இந்த துயரச்சம்பவத்தில் உயிர் இழந்த ராணுவ வீரர் கண்ணன் என்ற தாமோதரகண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாமோதரகண்ணனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்