பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் மும்பை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி பறிமுதல் அதிகாரிகள் தகவல்
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் மும்பை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்
மும்பை,
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் மும்பை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணமதிப்பு நீக்கம்
மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி உயர் மதிப்பு கொண்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னர் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை கண்டறிவதற்காக வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மற்றும் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். மும்பை விமான நிலையத்திலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
ரூ.2¼ கோடி பறிமுதல்
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட, கடத்த முயன்ற வெளிநாட்டு மற்றும் இந்திய பணம் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபற்றி விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் விமான நிலையத்தில் ரூ.2¼ கோடிக்கு மேல் இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.1 கோடியே 28 லட்சம் இந்திய ரூபாய் நோட்டுகள் ஆகும்” என கூறினார்.