திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4 மணிநேரத்தில் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்குமேல் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள் திருப்பாவை பாசுரம் பாடினர். அதைத்தொடர்ந்து அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.40 மணிவரை வி.ஐ.பி. பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2017-01-01 19:32 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4 மணிநேரத்தில் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்குமேல் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள் திருப்பாவை பாசுரம் பாடினர். அதைத்தொடர்ந்து அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.40 மணிவரை வி.ஐ.பி. பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனத்துக்கு 4 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 2 மணிநேரமும் ஆனது. வி.ஐ.பி. பக்தர்கள் ராமுலவாரிமேடை வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆங்கில புத்தாண்டையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதினாலும், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 2–வது பகுதியில் ஒரு சில கம்பார்ட்மெண்டுகளில் மட்டுமே பக்தர்கள் நிரம்பி காணப்பட்டது. தரிசன கவுண்ட்டர்களில் பக்தர்கள் இல்லாமல் காலியாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்