தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்
தெற்கு அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வருகிற 5–ந்தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,

அந்தமான் அருகே...
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 30 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் வருகிற 5–ந்தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தெற்கு அந்தமான் அருகே நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நோக்கி நகர்ந்து வந்தால் தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 5–ந் தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதுவரைக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.