தென்மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்-

தொடர் வன்முறை சம்பவங்களை தடுக்கும் விதமாக தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

Update: 2022-09-25 19:53 GMT

தொடர் வன்முறை சம்பவங்களை தடுக்கும் விதமாக தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் நிருபர்களிடம் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைபட்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் ஒரு கார், 5 மோட்டார் சைக்கிள்கள் எரிந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் வன்முறை சம்பவங்களை தடுக்கும் விதமாக, தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள்.

தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் வீடுகள், கடைகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பாட்டில்களில் வினியோகம்

பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வினியோகம் செய்ய வேண்டாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுத்தப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் டி.ஐ.ஜி. தலைமையில் இரவு ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

தென் மாவட்டத்தை பொறுத்தவரை 2 வழக்குகள் தற்போது வரை பதிவாகியுள்ளது. வீடுகள் மற்றும் முக்கிய பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்