சென்னை மெரினா கடற்கரையில் அலங்கோலமாக கிடந்த 2 ஆயிரம் கடைகள் அகற்றி சீரமைப்பு
சென்னை மெரினா கடற்கரை மணல்பரப்பில் அலங்கோலமாக கிடந்த தள்ளுவண்டி கடைகள் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன.;
சென்னை
சென்னை மெரினா கடற்கரை மணல்பரப்பில் அலங்கோலமாக கிடந்த தள்ளுவண்டி கடைகளால் பொது மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. மணல் பரப்பில் 2 ஆயிரம் தள்ளு வண்டிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் மாநகராட்சி சார்பில் 2 வரிசையாக ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளன. கடற்கரை மணல் பரப்பில் கிடந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.
குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மணல் பரப்பில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சுகாதாரத்தைப் பாதுகாக்க கடற்கரை மணலில் குப்பை கொட்டும் வியாபாரிகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை கடற்கரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கடற்கரையில் குப்பைகளை கொட்டும் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் மெரினா கடற்கரை முழுவதும் தூய்மையாக பராமரித்து அழகுபடுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.