தடகள போட்டியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

தேசிய மாணவர் தினத்தையொட்டி திருச்சியில் தடகள போட்டி நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

Update: 2022-07-09 19:43 GMT

தேசிய மாணவர் தினத்தையொட்டி திருச்சியில் தடகள போட்டி நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

தடகள போட்டி

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தேசிய மாணவர் தினத்தையொட்டி நேற்று 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.

இதில் 50, 100, 300, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டி ஓடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றன. மேலும் மாணவ-மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி, ஆண்களுக்கான கால்பந்து, கபடி போட்டிகள் நடைபெற்றது.

சான்றிதழ்

இந்த போட்டியினை திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி கமாண்டன்ட் ஆனந்தன் தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இந்த போட்டியில் கலந்து கொள்ள திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர் நல்லுசாமி அண்ணாவி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்