தனியார் பஸ்சுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

விபத்தை ஏற்படுத்தும் வகையில் சென்ற தனியார் பஸ்சுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-09-17 18:45 GMT

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி, குழந்தைகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று காலையில் மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் பாளையங்கால்வாய் அருகே சென்ற போது புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் நோக்கி சென்ற தனியார் பஸ் மொபட்டில் சென்றவர்களை இடிப்பது போல் சென்றுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த தம்பதி தனியார் பஸ்சை பின்தொடர்ந்து சென்று வண்ணார்பேட்டை பகுதியில் பஸ்சை மறித்து டிரைவரை கண்டித்துள்ளனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்துவது போல் பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதற்காக ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்