200 ஆண்டு பழமையான அரச மரம் துளிர்க்குமா?

200 ஆண்டு பழமையான அரச மரம் துளிர்க்குமா?;

Update: 2022-09-16 11:52 GMT

பல்லடம்

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் விநாயகர் கோவிலில் 200 ஆண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது. இந்தமரத்தில் வழக்கமாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைத்துவிடும். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த அரச மரம் பட்டுப்போய் விடுமோ? என பொதுமக்கள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் அல்லது, விபரம் தெரிந்த விவசாயிகள், 200 வயது மரத்தை காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்