200 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

நெல்லை மாவட்டத்தில் 200 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-25 19:28 GMT

நெல்லை மாவட்டத்தில் 200 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் நிலை மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, சிறு குறு தொழில் நிறுவனங்கள் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. நெல்லை பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் நேற்று செயல்படவில்லை. இதேபோன்று மாவட்டம் முழுவதும் 200 சிறு குறு தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் சுமார் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட சிறு குறு தொழிற்சங்க துணைத்தலைவர் சுந்தரேசன் கூறுகையில், ''கடந்த ஆண்டைவிட தற்போது நிலை மின்கட்டணம் 410 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலை மின்கட்டணத்தை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் 3 லட்சம் தொழிலாளார்கள் பாதிக்கப்பட்டுள்னர்'' என்றார்.

மின்கட்டண உயர்வை திரும்ப பெற...

நெல்லையில் சிறு குறுந்தொழில் சங்க (நெல்சியா) செயலாளர் சஞ்சய் குணசிங் கூறுகையில், ''தமிழக அரசு ஆண்டுதோறும் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது.

இதனால் ஏற்கனவே தமிழகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் அடிக்கடி மூலப்பொருட்களின் விலை ஏற்றம், வங்கிகள் அடிக்கடி வட்டி விகிதத்தை அதிகரித்தல், சரக்கு மற்றும் சேவை வரிகளால் ஏற்படும் பாதிப்பு, தொழிலாளர்களின் சம்பள உயர்வு கைதேர்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறை போன்றவற்றால் தத்தளித்து கொண்டிருக்கிறது.

எனவே தமிழக அரசு சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை ரத்து செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்