200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ராஜபாளையம் அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-08-25 18:44 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவல்

ராஜபாளையம் நகராட்சி காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 35). இவர் மசாலா பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை மொத்தமாக வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்தார். இதற்காக அருகே உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கிட்டங்கியாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த கிட்டங்கியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்ேபரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

200 கிலோ பறிமுதல்

அப்போது உணவு பொருட்கள் மத்தியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் மாரிமுத்துவையும் கைது செய்தனர்.

2 பேர் கைது

அதேபோல சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் பகுதியில் சாத்தூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்த நத்தத்துப்பட்டியை சேர்ந்த காளிராஜ் (28), சாத்தூர் குயில் தோப்பு பகுதியை சேர்ந்த ரேவந்த் (27) ஆகிய இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். உடனே காரை சோதனை செய்த போது அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 4 மூடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காளிராஜ், ரேவந்த் ஆகிய 2 பேரையும் சாத்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர் கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்