வாடிவாசலில் இருந்து 200 காளைகள் சீறிப்பாய்ந்தன

திருமயம் அருகே நடைெபற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து 200 காளைகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2023-05-04 18:31 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அடுகப்பட்டியில் அந்தரநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் 10 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர்.

அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளிக்குதித்து ஓடியது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பரிசு

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை அடுக்கப்பட்டி சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்