சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மாலையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதபாண்டி (வயது 28). இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுநாதபாண்டியை கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ரகுநாதபாண்டிக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.