வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர்
அருப்புக்கோட்டை பாலையம்பட்டியை சேர்ந்தவர் மகேஷ்குமார்(வயது 20). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ்குமார் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெய ஆனந்த், மகேஷ் குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.