வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Update: 2023-09-16 01:15 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா கீரனூர் ராஜம்பட்டியை சேர்ந்தவர் ரவிசெல்வன் (வயது 25). இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் கீரனூர் போலீசார் வாக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ரவிசெல்வனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 363-ன்கீழ் (கடத்தல்) ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து, சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்