சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாலியல் வன்புணர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கஸ்தாம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் கடந்த 2018-ம் ஆண்டு 6 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.
மகேந்திரன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உறவினர் முறை என்று கூறப்படுகிறது.
20 ஆண்டுகள் சிறை
இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட மகேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து மகேந்திரனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.