தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 20). கூலி தொழிலாளியான இவர், கடந்த 5.6.2021 அன்று 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சக்திவேலை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சக்திவேலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.