20 பெண்கள் காயம்

சாணார்பட்டி அருகே தேனீக்கள் கொட்டியதில் 20 பெண்கள் காயம் அடைந்தனர்.

Update: 2023-09-11 21:00 GMT

சாணார்பட்டி அருகே உள்ள மருநூத்து ஊராட்சி மந்தைகுளத்தில் நேற்று காலை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த தேன்கூட்டில் இருந்து தேனீக்கள் கலைந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்து பெண்களை கொட்டியது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்