திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்

மதுரை மாநாட்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

Update: 2023-08-06 12:04 GMT

அ.தி.மு.க. சார்பில் வருகிற 20-ந் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடக்கிறது. இதனையொட்டி மாநாடு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைக்கும் பணி திருப்பத்தூர் பஸ் நிலையம் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் நடைபெற்றது. நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர் வரவேற்றார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஆர்.நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என்.திருப்பதி, ஆர்.ஆறுமுகம், தம்பா கிருஷ்ணன், சோடா வாசு, கசிநாயக்கன்பட்டி வார்டு உறுப்பினர் செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி கவுன்சிலர் எஸ்.எம்.எஸ்.சதீஷ் நன்றி கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறுகையில், மதுரை மாநாட்டிற்கு திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். மதுரை மாநாடு எழுச்சி மாநாடாக, திருப்புமுனையாக அமையும், மாநாடு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்கள், ராட்சத பலூன், தெருமுனை பிரசாரம், நாடகங்கள் நடைபெற உள்ளது என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்