ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு.

Update: 2022-08-29 18:54 GMT

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் வெங்கடேஸ்வரா நகர் டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 21). இவர், தனது தாயார் தனம் மற்றும் அக்கா சங்கீதா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மணலியில் வசிக்கும் தனது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்து இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை திருடிச்சென்றுவிட்டனர். இது குறித்து ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் செங்குன்றத்தை அடுத்த பள்ளிகுப்பத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுபற்றி செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்