பெத்தநாயக்கன்பாளையம் அருகே துணிகரம்: ஓய்வு பெற்ற கண்டக்டர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஓய்வு பெற்ற கண்டக்டர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை போனது. மர்மநபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-11-18 22:30 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

ஓய்வு பெற்ற கண்டக்டர்

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அரசு பள்ளி எதிரே வசித்து வருபவர் பாண்டியன். அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சரோஜா (வயது 65). இவர்கள் இருவரும் நேற்று காலையில் சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

திரும்பி வந்த போது வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த சரோஜா ஏத்தாப்பூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

புகாரின் பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த கொள்ளையில் ஏத்தாப்பூர் பகுதியில் உள்ளவர்கள்தான் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு கொள்ளை

பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா செக்கிடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (38). இவருடைய மனைவி சூர்யா (33). இவர், தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று மாலை வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த சூர்யா வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்