சிறப்பு கடன்மேளாவில் 20 பேர் விண்ணப்பங்கள் அளித்தனர்

வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த சிறப்பு கடன்மேளாவில் 20 பேர் விண்ணப்பங்கள் அளித்தனர்

Update: 2023-02-07 16:50 GMT

வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (டாப்செட்கோ, டாம்கோ), வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வேலூர் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கடன்மேளா இன்று நடைபெற்றது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா, சிறுபான்மையினர் நல அலுவலர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் ரமாவாணி தலைமை தாங்கி கடன்மேளாவை தொடங்கி வைத்தார்.

இதில் மத்திய கூட்டுறவு கிளை வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்கள் அளித்த சான்றிதழ்கள், ஆவணங்களை சரிபார்த்தனர்.

முகாமில் 20 பேர் பங்கேற்று விண்ணப்பங்கள் அளித்தனர்.

இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடனுதவி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்