நர்சிங் கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு வாந்தி மயக்கம் - கலெக்டர் விசாரணை

மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆஸ்பத்திரி டீனிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

Update: 2024-05-27 20:50 GMT

சேலம்,

சேலம் 4 ரோட்டில் உள்ள கே.என்.ராவ் மருத்துவமனைக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் உள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கி படிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் 4 ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சுகாதாரத்துறையினர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தினர்.

நர்சிங் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது வெளியில் இருந்து உணவு வாங்கி வந்து சாப்பிட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆஸ்பத்திரி டீனிடம் கேட்டறிந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்