சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் ரூ.20 கோடியில் மாணவ, மாணவிகளுக்கான விடுதி

சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் ரூ.20 கோடியில் மாணவ, மாணவிகளுக்கான விடுதியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரிறந்து வைத்தார்.

Update: 2023-01-20 18:32 GMT

திருவலம்

சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் ரூ.20 கோடியில் மாணவ, மாணவிகளுக்கான விடுதியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரிறந்து வைத்தார்.

சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மாணவ மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி 2019-20 ஆண்டில் தொடங்கப்பட்டது.

மாணவ, மாணவிகளுக்கு தலா 87 அறைகள் கட்டப்பட்டன. இதில் ஒரு அறையில் 3 பேர் தங்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3 தளங்களுடன் கூடிய கட்டிடத்தில் தரைதளத்தில் அலுவலக அறை, பாதுகாவலர் அறை, சமையலறை, உணவருந்தும் கூடம் என அனைத்து வசதிகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் துணை வேந்தர் ஆறுமுகம் விடுதி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் பதிவாளர் விஜயராகவன். நூலக அலுவலர் விநாயகமூர்த்தி. வார்டன் யோகானந்தம். மற்றும் பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்