மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி

லாரியின் பின்னால் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-01-03 13:14 GMT

லாரியின் பின்னால் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

நண்பர்கள்

வேலூர் விருப்பாட்சிபுரம் காந்திநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 25). கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராகுல்ராஜா (26),

இவர் சென்னையில் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று  இரவு 10 மணிக்கு விருப்பாட்சிபுரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் அடுக்கம்பாறை நோக்கி சென்றனர்.

இடையன்சாத்து பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியில் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ், ராகுல்ராஜா இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் (பொறுப்பு), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்