கடையில் விளம்பர பலகை வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி

கடையில் விளம்பர பலகை வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்.;

Update: 2023-10-24 20:36 GMT

வேலூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு டேனிரோட்டை சேர்ந்தவர்கள் கவுசிக் (வயது 25), சலீம் (22). இவர்கள் இருவரும் தனியார் மோட்டார் சைக்கிள் எண்ணெய் நிறுவனத்தின் விளம்பர பலகைகள் பொருத்துவது தொடர்பான பணிகளை ஒப்பந்த முறையில் செய்து வந்தனர்.

கடந்த 22-ந் தேதி கவுசில், சலீம் உள்பட 5 பேர் வேலூரை அடுத்த ஊசூர் குளத்துமேடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் இரவில், தனியார் நிறுவனத்தின் பழைய விளம்பர பலகையை அகற்றிவிட்டு புதிய விளம்பர பலகை வைபப்தற்காக சென்றனர். கவுசிக் மற்றும் சலீம் ஆகியோர் அந்த கடையின் 3-வது மாடிக்கு சென்று புதிய விளம்பர பலகையை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மற்ற 3 பேரும் பழைய விளம்பர பலகையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

அப்போது கடையின் அருகே சென்ற மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக புதிதாக மாட்ட முயன்ற விளம்பர பலகை உரசியது. இதில் கவுசிக், சலீம் ஆகியோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதைக்கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்