சேலம் இரும்பாலையில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

சேலம் இரும்பாலையில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2023-09-08 21:22 GMT

இரும்பாலை:

வெல்டிங் தொழிலாளி

சேலம் அரியாகவுண்டம்பட்டி கீழ் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் கங்காதுரை (வயது 34). வெல்டிங் தொழிலாளி. சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகன் சசிகுமார் (வயது 34). நண்பர்களான இவர்கள் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தாரமங்கலத்தில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சசிகுமார் ஓட்டினார். கங்காதுரை பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது இரும்பாலை கணபதிபாளையம் முதல்கேட் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

விசாரணை

இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். தங்கதுரைக்கு தலையில் பலத்த காயம் அடைந்தார். சசிகுமார் காயம் அடைந்து வலியால் துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கங்காதுரையை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், சசிகுமாரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கங்காதுரை பரிதாபமாக இறந்தார். சசிகுமாருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்