கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்

வி.கைகாட்டியில் கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-29 18:31 GMT

அரியலூர் மாவட்டம் காவனூர் காலனி தெருவை சேர்ந்தவர் வெள்ளையத்தேவன் (வயது 34). இவர் தனது உறவினரான சக்தி தேவனுடன் (20) மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வி.கைகாட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வெள்ளையத்தேவன், சக்தி தேவன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரைக்குறிச்சி பட்ட தெருவை சேர்ந்த கார் டிரைவர் கண்ணாயிரத்தை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்