மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் சாவு

கண்ணமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-01-16 12:12 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

மோட்டார்சைக்கிள்கள் மோதல்

கண்ணமங்கலம் அருகே சின்னஅய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் கோகுல் (வயது 25). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் இவர் கடந்த 15-ந் தேதி இரவு சுமார் 7.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் மளிகை சாமான் வாங்கி கொண்டு வந்தார்.

அப்போது சந்தவாசல் நோக்கி போளூர் வட்டம் வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் வெங்கடேசன் (23) மோட்டார்சைக்கிளில் வந்தார்.

அய்யம்பாளையம் கிராமம் காந்திநகர் ஏரிக்கரையில் வேலூர் - திருவண்ணாமலை சாலையில் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

2 பேர் பலி

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்