இரணியல் அருகே 3¾ கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
இரணியல் அருகே 3¾ கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திங்கள்சந்தை,
இரணியல் அருகே 3¾ கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர்கள் கைது
இரணியல் அருகே கண்டன்விளை மற்றும் மடவிளாகம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையிலான போலீசார் நேற்று காலை மடவிளாகம் மேல்கரை ரெயில்வே மேம்பாலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் 3 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட செங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 30), கண்டன்விளை பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.