கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் ஏமப்பேர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருகன் கோவில் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏமப்பேரை சேர்ந்த ஜெய்கணேஷ் மகன் உதயசூரியன்(வயது 20), காந்தி மகன் முரளி(19) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 கிராம் எடைகொண்ட 20 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.