கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
செஞ்சி,
செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் விக்கிரவாண்டியை சேர்ந்த ரமேஷ் மகன் அஜய் (வயது 20), சுந்தரம் மகன் கிருஷ்ணமூர்த்தி (25) ஆகியோர் என்பது தொிந்தது. இதையடு்த்து அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவா்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், செஞ்சி செல்வ விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் வைத்தி்ருந்த கடைக்காரர் ஜான்சன் (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.