மேலூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த வாலிபரை மதுபாட்டிலால் குத்திக்கொன்ற பயங்கரம்- குடிநீர் தொட்டியில் வீசிவிட்டு தப்பிய 2 வாலிபர்கள் கைது

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த வாலிபரை மதுபாட்டிலால் சரமாரியாக குத்திக்கொலை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-15 20:31 GMT

மேலூர்

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த வாலிபரை மதுபாட்டிலால் சரமாரியாக குத்திக்கொலை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுற்றித்திரிந்த வாலிபர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வண்ணாம் பாறைப்பட்டி கிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்துள்ளார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் அந்த வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன், மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் பாட்டிலால் குத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்..

சரண்

கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த வாலிபரை, 2 பேர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், அதே ஊரை சேர்ந்த பசுபதி (வயது19), பெருமாள் (22) ஆகிய 2 பேரும் கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபனிடம் சரண் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கூறியதாவது:-

சம்பவத்தன்று இரவு மதுகுடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தபோது சாலையோரத்தில் நின்று இருந்த அந்த வாலிபரை மோட்டார்சைக்கிளில் மறைவான இடத்திற்கு அழைத்து சென்றோம். ். அப்போது அந்த வாலிபர் தனது ஊர் திருநெல்வேலி என்றும், பெயர் ராேஜஷ் எனவும் தெரிவித்தார்.

கைது

ராஜேசை ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினோம். அதற்கு அவர் மறுத்ததால் கம்பால் தாக்கி, மதுபாட்டிலால் சரமாரியாக குத்தி கொலை செய்து, உடலை குடிநீர் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச் சென்றோம்.

இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்