போலீஸ் தேடிய 2 பேர் கைது

திருப்பனந்தாள் அருகே கூலித்தொழிலாளியின் கை துண்டிக்கப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-26 20:31 GMT

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் அருகே கூலித்தொழிலாளியின் கை துண்டிக்கப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கறி விருந்து

திருப்பனந்தாள் அருகே உள்ள திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது38). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை மகன் ஞானப்பிரகாஷ் (24). கடந்த 2020-ம் ஆண்டு ஞானப்பிரகாஷ் வீட்டில் திருமணத்துக்கு பின் கறி விருந்து நடந்தது. அப்போது அங்கு சென்ற அய்யப்பன் தகராறு செய்தார். இதை தட்டிக்கேட்ட ஞானபிரகாஷ் உட்பட 3 பேரை அய்யப்பன் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது.

கைது

இந்நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு அய்யப்பனுக்கும், ஞானபிரகாசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஞானபிரகாசுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செல்வமணி (26), முருகதாஸ் (23), பாலகிருஷ்ணன் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து அய்யப்பனை திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.இதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது. இதனால் மயங்கி விழுந்த அய்யப்பனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானபிரகாஷ், பாலகிருஷ்ணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகதாஸ், செல்வமணியை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்