தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் சன் பவுலரிங் என்ற பெயரில் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அன்சாயி பசு மாத்திரி, தனது மனைவி ஹசாரி, 2 வயது குழந்தை புஞ்சா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பண்ணைக்கு சொந்தமான டிராக்டரில் கோழித்தீவன மூட்டைகள் ஏற்றிக்கொண்டு வரப்பட்டது. அந்த டிராக்டரை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த பொன்னர் (வயது 28) என்பவர் ஓட்டினார். பண்ணையில் ேகாழித்தீவன மூட்டைகளை இறக்கி விட்டு டிராக்டரை பின்னால் எடுத்தனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை புஞ்சா மீது டிராக்டர் டிெரய்லரின் பின் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திேலயே உடல் நசுங்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக டிராக்டர் டிரைவர் பொன்னர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.