மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை

மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2022-09-24 19:57 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கரேஸ்வரி (37). இவர்கள் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 18.2.2020-ந் தேதியன்று கோவிந்தராஜ், சங்கரேஸ்வரியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி திருநாவுக்கரசு விசாரித்து கோவிந்தராஜீக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்