வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-07-12 18:45 GMT

நாகா்கோவில்:

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் தொல்லை

நித்திரவிளை அருகே ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 35). இவர் ஒரு பிளஸ்-2 மாணவிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுள்ளார். அதாவது, மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பின்தொடர்ந்தபடி கிண்டல் செய்வது, ஆபாச செய்கை காட்டுவது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இதுபற்றி மாணவி தனது தந்தையிடம் கூறி அழுதார். உடனே அவர் கிறிஸ்துதாசை கண்டித்தார். அப்போது ஆத்திரமடைந்த கிறிஸ்துதாஸ் "உன் மகள் முகத்திலும், உன் முகத்திலும் ஆசிட் வீசி கொலை செய்து விடுவேன்" என மிரட்டினார். மேலும் மாணவியின் தந்தையை கம்பால் தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

2 ஆண்டு சிறை

பின்னர் இதுபற்றி மாணவியின் தந்தை நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள விரைவு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்துதாசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்