தேவகோட்டை அருகே விவசாயியை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை

தேவகோட்டை அருகே விவசாயியை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை கோர்ட்டு வழங்கியது.

Update: 2023-07-27 19:00 GMT

தேவகோட்டை

தேவகோட்டை தாலுகா ஆய்ங்குடிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி. இவர் தனது வீட்டின் முன்பு மனைவி பிச்சம்மாள் மற்றும் புதுக்கண்டனூரை சேர்ந்த காளியப்பன் ஆகியோருடன் கடந்த 10.3.2018-ம் தேதி பேசிக்கொண்டிருந் தார். அப்போது அதே ஆய்ங்குடிவயலைச் சேர்ந்த சொர்ணம் மகன் பூமிநாதன் (50) என்பவர் ஆறுமுகத்திடம் சென்று வீடு கட்டி குடியிருக்கும் இடம் தனக்கு சொந்தம் என்று சொல்லி பிரச்சினை செய்து தாக்கினார். இது தொடர்பாக ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் பூமிநாதன் மீது வழக்கு பதிவு செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி மாரிமுத்து குற்றம் சாட்டப்பட்ட பூமிநாதனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் அரசு வக்கீல் செந்தில்வேலவன் ஆஜர் ஆனார்.

Tags:    

மேலும் செய்திகள்