உடற்கல்வி ஆசிரியருக்கு 2 ஆண்டு சிறை
மாணவிக்கு நெருக்கடி கொடுத்த உடற்கல்வி ஆசிரியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். அவருக்கு அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் பாலச்சந்திரன் (வயது 25) என்பவர் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் இந்த வழக்கை விசாரித்து உடற்கல்வி ஆசிரியர் பாலச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.