பர்னிச்சர் கடை உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை

காசோலை மோசடி வழக்கில் பர்னிச்சர் கடை உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;

Update: 2023-09-05 18:45 GMT

கள்ளக்குறிச்சி

சின்னசேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஆறுமுகம்(வயது58) அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் கோபாலகிருஷ்ணன்(57) என்பவருக்கு ரூ.10 லட்சம் கடனாக கொடுத்தார். இதற்கு கோபாலகிருஷ்ணன் ஆறுமுகத்துக்கு காசோலை வழங்கினார். அதை மாற்றுவதற்காக வங்கியில் செலுத்தியபோது கோபாலகிருஷ்ணனின் வங்கி கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்தது. இது குறித்து ஆறுமுகம் கடந்த 2020-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கோபாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 மாதத்துக்குள் ரூ.10½ லட்சத்தை வழங்க வேண்டும் அப்படி பணத்தை வழங்க தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஹரிஹரசுதன் தீர்ப்பு வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்