மாநகராட்சியில் வரிவசூல் செய்ததில் முறைகேடு: 3 அலுவலர்களுக்கு 2 ஆண்டு சிறை

மாநகராட்சியில் வரிவசூல் செய்ததில் முறைகேடு செய்த 3 அலுவலர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2022-06-16 23:07 GMT

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வரி வசூல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் மண்டல அலுவலகத்தில் பில் கலெக்டர்களாக பணியாற்றிய முரளிதரன் (வயது 50), சக்திவேல் (54) மற்றும் இளநிலை உதவியாளர் பழனிவேல் (72) ஆகியோர் பொதுமக்களிடம் வரி வசூலித்த தொகையை அரசுக்கு செலுத்தாமல் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் முரளிதரன், சக்திவேல், பழனிவேல் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரெய்கானா பர்வீன் தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்