கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில்மனிதர்களை ஈடுபடுத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை என நாமக்கல் நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-09-08 18:33 GMT

நாமக்கல் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நகராட்சி வாகனம் மற்றும் நகராட்சிகள் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு 14420 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் பாதாள சாக்கடை அடைப்புகள் குறித்த புகார்களையும் அந்த எண்ணில் தெரிவிக்கலாம்.

மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 விதிகள் 7-ன் படி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதர்களை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தக் கூடாது. மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 2-வது முறையாக தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது சிறை தண்டனையும், அபராதமும் சேர்த்து விதிக்கவும் வாய்ப்புள்ளது. அதோடு கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் தொழிலாளரின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்