அணைக்கட்டு
பள்ளிகொண்டா அருகே 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது.
2 வயது குழந்தை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பள்ளிக்குப்பத்தை அடுத்து அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தியாகு. இவரது மனைவி திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். தியாகு அங்கு உள்ள துணிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் கிருஷ்வந்த் என்ற ஆண்குழந்தை உண்டு. இந்த குழந்தையை தனது தாயிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.
வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றனர். இந்த நிலையில் கிருஷ்வந்த் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உள்ளான். இதை யாரும் கவனிக்காததால் குழந்தை தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி
வெகுநேரம் ஆகியும் குழந்தை இல்லாததால் பாட்டி குழந்தையை உறவினர்கள் யாராவது தூக்கி சென்றார்களா என்று அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். எங்கும் கிடைக்காததால் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்த்த போது குழந்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----
Reporter : K. DHIWAKAR Location : Vellore - VELLORE SUB-URBAN - ANAICUT