வெள்ளிச்சந்தை அருகே வெவ்வேறு சம்பவம்:2 தொழிலாளர்கள் தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-07-16 22:04 GMT

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளர்கள் தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே உள்ள பெரும்செல்வவிளையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 56). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவகுமார் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததை, அவருடைய மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சிவகுமார் வீட்டை விட்டு வெளியே சென்றார். இரவு வீட்டிற்கு வரவில்லை. நேற்று காலை சிவகுமார் வீட்டு முன் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து அவருடைய மகன் சுபின் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

இதே போல் மற்றொரு சம்பவம் வெள்ளிச்சந்தை அருகே சாந்தபுரம் பேயோடு பகுதியில் நடந்துள்ளது. பேயோடை சேர்ந்தவர் ரெங்கசாமி (62), தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக காலில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். அவர் விஷ மாத்திரையை தின்று சரல் அருகே தோப்பில் மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரெங்கசாமி இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து அவருடைய மனைவி கீதா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்