ஆசிரியரின் மனைவி உள்பட 2 பெண்கள் மாயம்

ஆசிரியரின் மனைவி உள்பட 2 பெண்கள் மாயம் ஆனார்கள்.

Update: 2022-06-22 18:57 GMT

கரூர் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 48). ஆசிரியர். இவரது மனைவி ரம்யா (33). இவர் பாலிடெக்னிக்கில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற ரம்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தங்கவேல் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கரூர் அருகே உள்ள மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மகள் நர்மதா (23). இவர் சம்பவத்தன்று நாமக்கல் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முத்துச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்