மாடு மீது மொபட் மோதியதில் 2 பெண்கள் படுகாயம்

திருவண்ணாமலையில் மாடு மீது மொபட் மோதியதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-26 12:21 GMT

திருவண்ணாமலை வேங்கிக்காலில் இருந்து பஸ் நிலையம் நோக்கி செல்லும் சாலையில் பச்சையம்மன் கோவில் நுழைவு வாயில் பகுதியில் இருந்து மெயின் ரோட்டில் மாடு ஒன்று ஓடி வந்துள்ளது. அப்போது பஸ் நிலையம் நோக்கி 2 பெண்கள் சென்ற மொபட் எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதியது.

அதில் தூக்கி வீசப்பட்ட 2 பெண்களுக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் போதிய வேகத்தடைகள் இல்லாததால் மோட்டார் சைக்கிள், மொபட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர்.

இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. உயிர் சேதம் ஏற்படும் முன்பு விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வேகத் தடை அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்