வெவ்வேறு இடங்களில் 108 ஆம்புலன்சில் 2 பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தன

வெவ்வேறு இடங்களில் 108 ஆம்புலன்சில் 2 பெண்களுக்கு ஆண் குழந்தைக்ள பிறந்தன.

Update: 2023-01-09 16:49 GMT

திருவண்ணாமலை தாலுகா காட்டு நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 27). கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி தீபிகாவிற்கு (22) நேற்று முன்தினம் பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஏந்தல் கிராமத்திற்கு அருகில் செல்லும் போது பிரசவவலி அதிகமானதால் 108 ஆம்புலன்சிலேயே தீபிகாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஷேக் முத்தலி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அபுதாஹிர் தேவையான மருத்துவ உதவிகளை அளித்து தாயையும், குழந்தையையும் நல்லமுறையில் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரியில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதேபோல் செங்கம் தாலுகா ஊர் கவுண்டனூர் குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமனந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் ஊர் கவுண்டனூர் கிராமம் அருகில் செல்லும் போது பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்சிலேயே ஐஸ்வர்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாயையும், குழந்தையையும் பரமனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்